புதன், 18 மார்ச், 2020

எங்கே...எங்கே..? -ஜானி


சொல்வதை
சொக்கிப்போய்
சுரணையற்று
கேட்டிருந்த
காதெங்கே?
சுண்டியிழுத்த
புன்னகையில்
கட்டுண்ட
கண்ணெங்கே?
வெட்டிப்போன
மென்சிரிப்பின்
மின்வெட்டில்
உறைந்துபோன
மனதெங்கே?
எனைத்
தொலைத்து
உனை
வாழ்பவனானேன்
இங்கே...
-ஜானி

2 கருத்துகள்:

மயக்கிடும் மழலையர்_ஜானி சின்னப்பன்.

  2 3 4 5 குறி வெச்சா இரை விழணும்! கொள்கைல உறுதியா இருக்கிற நம்ம  நாரையார் விடுவாரா என்ன? 6 அண்ணே என் பேரு நத்தை குத்தி நாரை.. ஆனா எனக்கு இன...