வணக்கங்கள் அன்புள்ளங்களே.. தீபாவளி அருமையாக சென்றிருக்கும் என்று நம்புகின்றேன்.. எண்ணெய் குளியல் அதன் பிரதான அம்சம்.. உடலுக்கு உறுதி தரும் எண்ணெய் குளியல் மறக்காதீர்கள் என்று வருடாவருடம் கூறுவதைப் போன்றே இம்முறையும் கூறுகிறேன்.. அது நமது பாரம்பரியத்தில் சிறப்பான ஓர் அம்சம்.. தீபாவளிக்கு லயன் காமிக்ஸ், வகம் காமிக்ஸ் என்று ஒரு உத்வேகத்துடன் அனைத்து ஸ்பெஷல்களையும் வாசித்து முடித்திருப்பீர்கள்.. என்னால் முடிந்ததொரு சிறு கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முயற்சிக்கிறேன்.. தொடர் சில தினங்கள் தொடரும்.. வாசித்து மகிழ அன்புடன் அழைக்கிறேன்.. எங்கோ ஒரு மூலையில் யுத்தம் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.. இராணுவம் இல்லையேல் நாட்டுப்பற்று மிகுந்த இராணுவ வீரர்கள் நமக்காக உயிர் கொடுக்கவில்லை என்றால் நாம் இங்கே நிம்மதி கொள்வதும் ஏது.. அப்படிப்பட்ட இராணுவத்தினரின் கதைகள் எந்த தேசமாயினும் இரசித்து வாசிக்க வைக்கக் கூடியவையே.. இந்த சிறு கதை உங்களுக்கு எப்படி என்று முடிந்தபின்னர் தெரிவிக்கலாம். நன்றி..
புதன், 22 அக்டோபர், 2025
காத்திருந்த கழுகுகள்_இராணுவக் கதை.
இதன் வண்ணப்பதிப்பை செயற்கை நுண்ணறிவின் துணைக் கொண்டு பதிவிடும் யோசனையை நமது நண்பர் திரு.ஸ்ரீராம் லட்சுமணன் அவர்கள் தெரிவிக்க அதனை செயல்படுத்தியபோது கிடைத்த ரிசல்ட்..
அல்டிமேட் இரகம்..
அவருக்கே இந்த பக்கத்தை டெடிகேட் செய்கிறேன்.. ஒவ்வொரு சிந்தனையும் அதை செயல்படுத்தும் யோசனையும் அவரிடமிருந்தே கிட்டி வருகிறது.. அவரை வாழ்த்தி இந்த பக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..
மழைக்காலம்.. அனைவரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.. கவனம்.. நம் எச்சரிக்கையே வரும் முன்பு காக்கும் நல்ல ஆயுதம் என்பதை உணர்ந்திருப்போம்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஜானி ஒரு வெற்றி வீரன்..
நன்றி நன்றி நன்றி! ஐந்து லட்சம் ஹிட்ஸ் வழங்கிய வாசகப் பெருமக்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள் .. வணங்குகிறேன் அனைவரையும்.. செயற்கை நுண...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
ஆம் நண்பர்களே.. வருக.. வணக்கங்கள்.. லயன் காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனலில் வந்த எடிட்டர் திரு.விஜயன் அவர்களது அதிகாரப் பூர்வமான அறிவிப்பு.. மிக்க...
-
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவ...
ஆரம்பம் அமர்க்களம்..எதிர்பார்ப்பை தூண்டுகிறது....
பதிலளிநீக்குநன்றி சார். இதன் அப்டேட்ஸ் விரைவில் வரும்..
நீக்கு