வியாழன், 24 அக்டோபர், 2019

இது லயன் சந்தா 2020 டைம்ஸ்...

வணக்கங்கள் பிரியமானவர்களே.. 2020 ல் வெளியாகவிருக்கிற நம்ம லயன் காமிக்ஸ் சந்தா அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடைகளில் இதழ்கள் மலரும் காலங்கள் கனாவாகிப் போன இந்த நாட்களில் புதிய எளிமையான விலைகளில் அடுத்த ஆண்டு புத்தகங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. கடைகளில் புத்தகங்கள் கிட்டா தொலைவில் இருக்கும் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு தோழர்கள் தெரிவு செய்வது சந்தா முறையையே. மேலும் குறிப்பிட்ட சந்தா தொகை கையிருப்பில் இருந்தால் மாத்திரமே தமிழ் நாட்டின் ஒரேயொரு ஒற்றை காமிக்ஸ் பதிப்பகத்தின் நிலைத்தன்மை நீடிக்கும் என்கிற நிலைமையிலேயே தற்போதைய காமிக்ஸ் துறை இருக்கிறது என்கிற துரதிருஷ்டமான நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் சந்தா எனும் சிவப்பு கம்பளத்தை வாசகர்கள் நாம் விரித்து 2020ஆம் ஆண்டின் சொகுசான பயணத்தை உறுதிப்படுத்தலாம் தோழமை உள்ளங்களே....  கமான்..கமான்...இட்ஸ் டைம் டு செலிப்ரேட்...























மேலும் விவரங்களுக்கு:

10 கருத்துகள்:

  1. ஜேம்ஸ்பாண்ட் கதைகள் ராணியில் வந்தவை பெயர் என்னவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டாம்பூச்சிப்படலம் ராணிகாமிக்ஸ் 059 கடல் கன்னிதான் அது.
      விண்ணில் ஒரு வேதாளம்-கவச உடை.டாக்டர் நோ அதே பெயரிலேயே..

      நீக்கு
  2. அட்டவணை அற்புதம் குறை ஒன்றும் இல்லை

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...