சனி, 26 அக்டோபர், 2019

Xiii-வில்லன்கள் ஒரு பார்வை..கே.வி.கணேஷ்.

ப்ரியமானவர்களே.. உலகளாவிய கவனத்தை ஈர்த்த கதைத்தொடர்களுள் முதன்மையான Xiii... பிரம்மாண்டத்தின் இன்னொரு பெயர்.. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள்..எக்கச்சக்க இலக்குகள்...ஆர்வமூட்டும் சம்பவங்கள்...திகிலூட்டும் திருப்பங்கள்...இந்த கதையை புரிந்துகொண்டு விளக்கம் அளிப்பவர்களில் சிறப்பான ஒருவராகிய திரு.கே.வி.கணேஷ் அவர்களதுபார்வை இதோ...
வணக்கம் நண்பர்களே
நேற்று நமது நண்பர் மணிவாசகம் அவர்கள் ஒரு கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.
XIII ன் வில்லன்கள் யாரென்று?

இதற்குநமது நண்பர் கும்பகோணம் ஜே XX குழுவினர்
என்று பதிலளித்திருந்தார்.
ஆனால் இந்த பதில் எனக்கு சம்மதமில்லை.

விளக்கமான விரிவான மீண்டும் ஒரு வில்லன் விசாரணை.

ஷான் மல்வே மற்றும் கார்லா
தம்பதிகளுக்கு மகனாக நிறைமாத கர்ப்பமாக தாய் வயிற்றில் இருக்கும்போதே நமது
ஜேஸனின் முதல் வில்லன் அவரது தாய் மாமன்
ஃப்ராங்க் ஜியார்டினோதான்.
விளக்கத்திற்கு படியுங்கள் இரத்தப் படலம் பாகம் 11.

இரண்டாவது வில்லனாக ஜேஸன்  வாழ்க்கையில் குறுக்கே வருவது
போல்டர் யுனிவர்சிட்டியில் படிக்கும்போது சக நண்பனான
சீமஸ் ஓ நீல் இன் மாமாவான
டெரன்ஸ் பார்னஸ் ஜேசனை
கொல்ல முயன்று இரண்டாவது
வில்லனாகிறார்.
இதன்பிறகு நமது ஜேசன்
சிமசின் அடையாளங்களோடு கியூபா செல்ல கெல்லி பிரையன்
பெயர் மாற்றத்தோடு போகிறார்.
அங்கே புரட்சிப் படையினர் உடன்
இணைந்து போராடிய போது அவருக்கு வில்லனாக வந்தது
கர்னல் பெரால்டா.

ஸ்டண்ட் மேன் என்ற பெயரில் போராடிய நமது ஜேசன் பிறகு
பெரால்டாவால் சிறைப்பிடிக்கப்பட்டு
அதிர்ஷ்டவசமாக அட்மிரல்
ஹெய்டெஜரால் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மையான
XIII ஸ்டீவ் ராலண்டின்
மாற்று ஆளாக போவதற்காக
தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு
XX குழுவினரால் அடையாளம் காணப்பட்டு பீகாக் வளைகுடா
பகுதியில் லேடி B கப்பலில்
மங்கூசால் தலையில் சுடப்பட்டு
பார்ஹார்பர் கடற்கரையில்
கரை ஒதுங்குகிறார் நம்ஜேசன்.
இந்தவகையில் நான்காவது வில்லனாக வருகிறார் மங்கூஸ்..

அதன்பிறகு

ஈஸ்ட் டவுன் நகரில் தனது விசாரணையை ஆரம்பிக்கும் ஜேசன் அந்த நகரின் போலீஸ் துறையின் லெப்டினன்ட் ஹெம்மிங்ஸ் ஐந்தாவது வில்லனாக வருகிறார்.
விபரங்களுக்கு பாகம் 1.

அடுத்ததாக
ஸ்டீவ் ராலண்டாக உருவெடுத்து
சவுத்பர்க் நகரில் உள்ள தனது குடும்பத்தில் இணைவதற்கு செல்கிறார். அங்கே அவருக்கு வில்லனாக மாறுபவர்கள் அவரது சித்தப்பா மாட் ராலண்ட்
சின்னம்மா பெலிசிட்டி.

அடுத்தபடியாக வில்லனாக வருவது ப்ளைன் ராக் சிறையின்
டாக்டர் ரால்ஃப்.

நான்காவது பாகத்தில் வில்லனாக வருவது ஸ்பேட்ஸ்  அதிரடிப்படையின்
லெப்டினன்ட் க்வின்
மற்றும்
கர்னல் மெக்கால்

அடுத்து வில்லனாக அவதரிப்பது
கால்வின் வாக்ஸ்
ஜெனரல் ஸ்டாண்ட்வெல்.

ஆறாவது பாகத்தில் வில்லனாக
வருகிறார்  டிவிக்ட் ரிக்பி.
மற்றும் ஷெரீஃப் கீய்ன்.
ஹோட்டல் ஸீ வியூ முதலாளி
மர்டோக்.
அடுத்த வில்லன் சக்திவாய்ந்த
ஜனாதிபதி வாலி ஷெரிடன்.
அடுத்ததாக இரினா. விபரங்களுக்கு பாகம் 8.

பாகம் 9, 10, 11
இதில் வில்லனாக அவதாரம் எடுப்பவர்கள்
மினார்கோ கம்பெனியர்
ப்ரொபசர் ப்ரெட்டரிக் சிம்மல்
ஏஞ்சல் ( எ ) ஜோர்ஜ்.

அடுத்த வில்லன்
அல்லது வில்லி
ஜெசிக்கா மார்ட்டின்.

மேக்மில்லன் பொக்கிஷத்தை தேடி அலையும் போது குறுக்கிட்டவன்
வால்டெஸ். (சியரா மாட்ரா மலை
பகுதி) .
கடைசியாக
டான் ரிகபெர்ட்டோ.


இதன்பிறகு இரண்டாவது சுற்றில் தொடரும் வில்லன்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

முதல் சுற்று வில்லன்கள்
1.ஃப்ரான்க் ஜியார்டினோ
2டெரன்ஸ் பார்னஸ்.
3. கர்னல் பெரால்டா.
4. மங்கூஸ்
5. லெப்டினன்ட் ஹெம்மிங்ஸ்.
6. மாட் ராலண்ட்
7.பெலிசிட்டி
8. டாக்டர் ரால்ஃப்
9. லெப்டினன்ட் கிவின்.
10. கர்னல் மேக்கால்.
11. கால்வின் வாக்ஸ்
12. ஜெனரல் ஸ்டாண்ட் வெல்
13.டிவிக்ட் ரிக்பி
14. ஷெரீஃப்  கீய்ன
15.ஸீவியூ ஹோட்டல் முதலாளி
      மர்டோக்
16. இரினா.
17.வாலி ஷெரிடன்.
18.மினார்க்கோ கம்பெனியினர்.
19. ஏஞ்சல் (எ )ஜோர்ஜ்.
20.புரபசர் பிரடரிக் சிம்மல்.
21.ஜெஸிக்கா மார்ட்டின்.
22.வால்டென்.(சியரா மாட்ரா                  மலைப்பகுதி) 
23.டான் ரிகபெர்டோ.

இவர்களே நமது ஜேஸனின்
வில்லன்கள்.

மேலும் நமது நண்பர் கும்பகோணம் J சொல்லியது போலXX குழுவினர் 13க்கு வில்லன்கள் கிடையாது.
XX குழுவே குக் க்ளக்ஸ் கான்
மர்ம அமைப்பால் ஏற்படுத்தப்பட்ட
ஒரு அமைப்பு. இதன் நோக்கம்
ஆட்சிமாற்றம் யார் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே.
இந்த குழுவில் 13 நியமிக்கப்பட்டது
 கேப்டன் ஸ்டீவ் ராலண்டு.
இவரது இறப்பிற்கு பிறகே
அவரது இடத்தில் உண்மையை
கண்டு பிடிக்க உருமாற்றம்
செய்து உளவறிய
அனுப்பப்பட்டவரே
நம் ஜேஸன்.

இந்த விளக்கம் தவறாக
இருந்தால் மன்னிக்கவும்.
இப்படிக்கு
உங்கள் நண்பன்
K.V. GANESH.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...