வெள்ளி, 25 அக்டோபர், 2019

*எளிதல்ல ஏஜெண்டாக இருப்பது..*

இதோ ஓர் காமிக்ஸ் முகவரின் நேரடி அனுபவம்..
புதிய கடைகளை பிடிக்கலாம்னு என்கிற உத்வேகத்தில் செயல்பட்டதில் ஒரு நான்கைந்து கடைகள் கிடைத்தன! நான்கைந்து மாதமும் நல்லாதான் போச்சு! முந்தின மாதம் ஐநூறு பாக்கி! போன மாதம் புதிய புத்தகங்கள் போட்டதில் 900 னு மொத்தம் 1400 தர வேண்டும்! இம்மாத புத்தகங்கள் வந்தததும்  வேகமாக கடையில் கொண்டு சேர்க்கலாம்னு நானும் வேகமாக கடைக்கு போனால், அங்கே ஷாக்! கடையில் வேறு ஒருவர் அவர் மனைவியுடன் உட்கார்ந்திருந்தார். சரி நாமளும் யார் மாறின என்ன புத்தகத்தை வழக்கம் போலவே போடுவோம்னு வழக்கமான முஸ்தீபுகளில் இறங்கினால், அந்த மலையாளக் கரையோரம்மா ஒரே போடா போட்டுச்சு, அதுல அடுத்த ஷாக், கடையை நாங்க வாங்கும் போது இந்த கடையில இருந்த பொருளெல்லாம் எங்களுக்கே சொந்தம். அதனால் பழைய புக்க எடுத்து கொண்டு புது புக்க போட்டுடு போன்னு சொல்லவே, என்னடா இது புதுசு புதுசா யோசிக்கிறாங்களேன்னு திரும்பவும் அவர்களிடம் விலாவாரியாக பேசிப் பார்த்தும் பில்லை காட்டி பார்த்தும் ஒன்னும் பப்பு வேகமாக 1400 போயிந்தான்னு நடை கட்டியாச்சு, நீங்க புக்கே விக்க வேணாம்னு 😖😞 இதை ஏன் இங்கு சொல்றேன்னா சிலபேர் கேக்குறாங்க 25 சதவிதம் கழிவு கிடைக்குது விற்பனையாளர்க்குனு ரொம்ப பெருமையாக கருவிக் கொள்கிறார்கள் அவர்களுக்காக சொல்லப்பட்டது 😔😖😖 இதுல எவ்வளவு ஆட்டம் பாட்டமெல்லாம் இருக்குனு ஆடிப்பார்த்தா தான் தெரியுமைய்யா 😳-திரு.கலீல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...