புதன், 2 அக்டோபர், 2019

சாத்தானின் தூதுவன்_ வேதாளர் _காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ்

வணக்கம் நண்பர்களே இம்முறை நண்பா்களின் விருப்பமான நாயகர் வேதாளரின் சாகசமான சாத்தானின் தூதுவன் எனும் சித்திரக்கதையை குறித்த என் பார்வையை பதிவிடுகிறேன்.
ஆழ நடுக்காட்டில் ஆங்கே ஓர் குகை..வேதாள மாயாத்மாவின் இருப்பிடம் அது... வேதாளர் அங்கிருந்து டெங்காலி காட்டினை பாதுகாத்து வருகிறாா். பழங்குடியினரின் தலைவா்களின் தவப்புதல்வர்களை ஜோம்பிகள் கடத்துகின்றனர்.. நடந்தது என்ன விடைதெரிய வாசியுங்கள்...சாத்தானின் தூதுவன்//
சர்வதேச மொழி பெயர்ப்பு தினத்தின்
சிறப்பு கொண்டாட்டத்திற்காக

 வேதாளரின் விஸ்வரூபம்
 சாத்தானின் தூதுவன்
 இதுவரை வெளிவராத புத்தம் புது
 மொழிபெயர்ப்புப் படக்கதை

டெங்காலி நாட்டின் பாதாளத்தில் வேதாளரின் அதிரடியால் கொல்லப்படும் மந்திரவாதி லுபாங்கா அவனது தந்தையால் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுகிறான்.. அதன் பின்னரோ கானகத்தின் பல பகுதிகளில் இருக்கும் எல்லா ராஜ்ஜியங்களிலும் உள்ள தலைவரின் வாரிசுகளை காதுகளில் ஒரு விஷத் தன்மை பொருந்திய ஊசியைச் சொருகி ஜோம்பிகள் ஆக்குகிறான்.

அவர்களது அட்டகாசம் எல்லை மீறிப் போக இதன் மர்மத்தை கண்டுபிடிக்க வேதாளர் விரைகிறார்.. ஒரு கட்டத்தில் லுபாங்கா இன்னும் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சியும் அடைகிறார். அதன்பின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாத வினோத சம்பவங்கள் அரங்கேறுகின்றன.. வேதாளரின் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு சமபலத்துடன் மோதுகிறான் லுபாங்கோ.. ஒவ்வொரு இடத்திலும் கிறங்க வைக்கும் அதிரடி தாக்குதல்களில் இருந்து வேதாளர் தப்பித்தாரா?? அவனை அடக்கி தனது கானகத்தில் அமைதியை நிலைநாட்ட எவ்வளவு கடுமையான சாகசங்களை அவர் செய்ய வேண்டியிருந்தது என்பதை அமானுஷ்ய திகிலும் மாயாஜாலமும் மந்திரமும் சேர்ந்த தாக்குதல்களும் அதிவேக சம்பவங்களும் அதிரடி சண்டைகளும் நிறைந்த இந்த புத்தம் புதிய மொழிபெயர்ப்புக் கதை உங்களுக்கு விளக்கும்

மிக மிக தத்ரூபமான வண்ணப் படங்களும் தமிழ் வடிவமைப்பும் நிரம்பிய இந்த புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படக்கதை இன்று பிடிஎஃப் வடிவில்

http://bit.ly/2mUtpRK

வேதாளரின் விஸ்வரூபம்
 சாத்தானின் தூதுவன்
 இதுவரை வெளிவராத புத்தம் புது
 மொழிபெயர்ப்புப் படக்கதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...