சனி, 5 அக்டோபர், 2019

LC 363- ஒரு பள்ளத்தாக்குப் படலம்..ட்ரென்ட்சாகஸம்..

வணக்கங்கள் வாசக நெஞ்சங்களே...இது லயன் காமிக்ஸ் வழங்கும் 363வது வெளீயீடான சித்திரக்கதைப் புத்தகம்.. ஒரு பள்ளத்தாக்குப் படலம்..கனடா நாட்டில் நிகழ்வதான கதைக் களத்தில் அமைக்கப்பட்ட கதைத் தொடரில் ஒன்று.

விலை-ரூ.80..
பக்கங்கள்-56
கதாசிரியர் -ரொடால்ப்
ஓவியர்-லியோ..
கதைசுருக்கம்: மர்மமான பல நிகழ்வுகள்நடக்கும் இரயில் தடமைப்புப் பணியில் ஓரிடம்.. அங்கே கரடியொன்றின் அட்டூழியம் தலைவிரித்தாடுவதாக நம்பப்படும் பிராந்தியத்தில் தன் கணவரைத் தேடிப் போகும் முன்னாள் காதலியுடன் மொகாஷி செவ்விந்தியர் துணையோடு ட்ரெண்ட் உதவிக்குப் போகிறார். த்ரில்லருக்குண்டான அனைத்தும் பரபரப்பான காட்சிகளாக அடுக்கப்படுகின்றன.. இறுதியில் சோகமான முடிவோடு நாமும் கதையின் கனத்தை சுமந்து திரும்புகிறோம்..
பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளவாறே 
அப்படியே கனடாவிற்கு கைப்பிடித்தழைத்துப் போவதுபோன்ற அற்புதமான சித்திரங்கள்...
அடுத்த வெளியீடு தீபாவளி டைமென்பதால் பலத்ததொரு கூட்டணியாக களமிறங்கும் அட்டகாசமான நாயக நாயகியரின் பொக்கிஷப் புதையல் சித்திரங்களின் அணிவகுப்புக்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது இம்மாத விளம்பரப்பகுதி...

போன்னெலி குழுமத்தின் அத்தனை நாயகநாயகியரையும் தமிழில் ஒருங்கே ஒற்றை நூலில் தரிசிக்கும் அட்டகாசமான வாய்ப்பினை லயன் காமிக்ஸ் ஜஸ்ட். ரூ.450/-லேயே ஏற்படுத்தித் தருகிறார்கள்... இந்த நூலினை தவறவே விடாதீர்கள்...
ஹாட்டஸ்ட் வரிகள்...



பை நட்பூக்களே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...