செவ்வாய், 10 டிசம்பர், 2019

இனிக்கும் இந்திரஜால்..தமிழ்..

இனிய வணக்கங்கள் ப்ரியமானவர்களே.. சின்னதாயொரு சாக்லெட் கொடுத்தாலும் நன்றி சொல்லி வாங்கிக் கொள்வதும் நற்செயல்களில் ஒன்றேயாம்.
தங்களுக்காக பரந்தமனம் கொண்ட அபூர்வமான ஒருசிலர் ஒன்றுகூடி அல்லது தனித்தனியாக கடும் பிரயத்தனத்தின்பேரில் பழைய காமிக்ஸ்களை அதிலும் அந்தக் காலத்தில் வசதிமிக்கவர்கள் வீட்டில் மாத்திரமே உலவிவந்த முழுவண்ண டைம்ஸ் ஆப் இந்தியா பதிப்பகத்தினரின் சித்திரக்கதை பிரிவின் இந்திரஜால் கதை வரிசைகளை தேடிப்பிடித்து ஸ்கேனுக்கும் பின்னர் எடிட்டிங்குக்கும் மெனக் கெட்டு அப்லோடி வருகின்றனர்.

அவர்களது முத்தான முழுமூச்சுடன் கூடிய கடும் முயற்சிக்கு நாம் தரும் பதில் பரிசு என்னவாக இருக்க முடியும்?

 ஒன்று தங்களிடமுள்ள இதுவரை வெளி வந்திராத இந்திரஜால் காமிக்ஸ்களை நல்ல தரமான ஸ்கேனிங்குக்கு தரலாம்.. அல்லது நீங்களே ஸ்கேன் இயந்திரம் வைத்திருக்கும் பட்சத்தில் 600 Dpi அஅளவிலும் tiff வகையிலான கோப்பாகவும் ஸ்கேன் செய்து எடிட்டிங்குக்கு எங்களுக்கு அனுப்பித் தந்து உதவலாம். இதன் பலனை நாமனைவரும் ஒரு சேர பெற்று மகிழப் போகிறோம் என்ற நம்பிக்கை மட்டும் போதும்.. இரண்டு புத்தகம் வைத்திராத வாசகர் நீங்கள் எனில் உங்கள் பாராட்டுக்களையும் கதை தொடர்பான விமர்சனங்களையும் முன் வைக்கலாம்.. இவற்றை செய்வதில் பெருமளவு தயக்கமும் மற்ற வாசகர்கள் என்ன சொல்வார்களோ என்கிற தயக்கமும் வெளிப்படையாகவே தெரிகிறது.. என் வலைப்பூவின் தரவிறக்க எண்ணிக்கையையும் கமெண்டுகளின் எண்ணிக்கையும் விசிட்டர்களின் எண்ணிக்கையையும் ஆராய்ச்சி மனோபாவத்தில் நாங்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுதானிருக்கிறோம்..


உங்கள் பங்கேற்பினை சிறப்பாக அளிக்கும்பட்சத்தில் ஊக்கத்துடன் இன்னும் அதிகமான கதைகளை வெளியிட முயற்சிப்போம். இல்லையேல் கவலையே வேண்டாம்..எத்தனையோ புத்தகங்களை தானாக தேடி வந்து சேரட்டும் என்கிற ரீதியில் அவரவர் வேலைக்கு அவரவர் திரும்பி செல்ல வாய்ப்புள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்..

யாரோ செய்யட்டும் எனக்கென்ன வந்தது என்ற சிந்தனை உங்களுக்கிருந்தால் நீங்கள் தமிழ் இந்திரஜால் மீதான அக்கறை உள்ளவரில்லை என்பதையும் நாங்கள் புரிந்து கொள்வோம்.. இலவசமாக பெறும் எதற்கும் மதிப்பில்லை என்பதை உணர்ந்தே இருக்கிறோம்..ஆனால் நீங்கள் டேட்டா பேக்குக்கு செலவிடும் தொகைகளை எங்கள் முயற்சிக்கு நீங்கள் தரும் அங்கீகாரம் என்றே எடுத்துக் கொள்கிறோம்..
என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...