பரபரவென்று ஆடையை அவிழ்த்தெறிந்துவிட்டு எண்ணெயோடு குழைத்து உடலெங்கும் கரிபூசி இருளில் பதுங்கி முன்னேறி வங்கி சுவரில் கன்னமிட்டு உள்ளே நுழைந்தார்கள் மூவரும்.. செக்யூரிட்டியை வெகுசுலபமாக வீழ்த்தி முன்னேறினர். மிகவும் நுணுக்கமான திட்டம் அது. பிழையே இல்லாதவாறு பார்த்துப் பார்த்து செதுக்கி வரக்கூடிய எல்லாப் பிரச்சினைகளையும் முன்கூட்டியே கணக்கிலெடுத்துக் கொண்டு திறம்பட தீட்டிய திட்டம். மின்னணு அலாரங்களையும் அகச்சிவப்பு கதிர் கண்காணிப்பினையும் வெகுகவனமாக தவிர்த்துக் கொண்டு முன்னேறினர். கனத்த லாக்கர் சில வினாடிகளில் பணிந்து வாயை ஆவென பிளந்துகொண்டது.. கருப்பு உடலில் பளிச்சென வாயெல்லாம் பல்லாக அவர்கள் இருப்பை காட்டிக் கொடுத்தது. பணத்தையும் நகைகளையும் வேகமாக அள்ளிப் போட்டுக் கொண்டிருந்த அதே வினாடி..இருளில் அலைந்த ஆந்தையொன்று எலியைக் கண்டு பாய எலி தெறித்தோடி புத்தம்புது துளையின் வழியே வங்கி உள்ளே பாய துரத்திய ஆந்தை சடசடவென அகன்ற இறக்கைகளை விரித்துக் கொண்டு உள்ளே அகச்சிவப்பு கதிரலை சென்ஸார்களை தாறுமாறாகக் குழப்பியடித்தபடி பறக்க சின்னதொரு பிரளயமே நிகழ்ந்தது அங்கே.. அலாரங்கள் தொடர்ந்து அலற டயர்கள் கிறீச்சிட வெகுவேகமாக சைரன் ஒலியோடு பாய்ந்து வந்தது வங்கிக்கு மிக அருகே நின்றிருந்த போலீஸ் ரோந்து வாகனம்..
செவ்வாய், 3 டிசம்பர், 2019
எச்சரிக்கை இது கொள்ளை டைம்..வினாடி கதைகள்_ஜானி சின்னப்பன்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்
வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...
விதி வலியது.. செம ட்விஸ்ட்..
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழர்..
நீக்குசூப்பர் அண்ணாச்சி
பதிலளிநீக்குஹாய் சங்கர்...நல்வரவு.. தேங்க்யூப்பா..
நீக்குசூப்பர் அண்ணாச்சி
பதிலளிநீக்குடபிள் தேங்க்ஸ்..
பதிலளிநீக்குSuperb..எதிர்பாரத முடிவு.. அசத்தல்
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழர்..
நீக்கு