ஞாயிறு, 1 டிசம்பர், 2019

பழிவாங்கும் கடல் ராணி_வேதாளர்


*குழந்தை குமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு*
*பழிவாங்கும் கடல் ராணி

*
*இன்றுவரை தமிழில் வெளிவராத மாயாவி முகமூடி வேதாளரின் புத்தம் புதிய மொழிமாற்று காமிக்ஸ் சாகசம்*
பிளாக் போவின் பொக்கிஷம் கதையில் கடைசியில் தப்பிப் பிழைக்கும் அவனது மகள் மேரி போ அதன்பின் யானை தந்தம் விற்பனை, அடிமைகள் மற்றும் பெண்களை கடத்தி வந்து விற்பது என ஒரு மிகப்பெரிய அநீதி சாம்ராஜ்யத்தை நிறுவி அரண்மனையை விட பெரிய மாளிகையை கட்டி அதில் வசிக்கிறாள். வேதாளரை பழிவாங்கும் எண்ணம் ஒன்றே அவள் விடும் ஒவ்வொரு மூச்சிலும் கலந்திருக்கிறது.
வேதாளரின் மனைவி ஜேனட் தன் சித்தப்பா மகள் சில்வியாவுடன் மோரிஸ்டவுன் வரப்போகும் செய்தி அறிந்து அங்கு வந்தடைகிறாள் மேரி போ. அந்த ஊரின் மாறுவேட திருவிழாவில் கலந்துகொள்ள மனைவியின் அழைப்பின் பேரில் வேளாளரும் வருகிறார். அவரை கடத்த சூழ்ச்சிகள் நடக்கின்றன. பல பரபரப்பான சம்பவங்களுக்கு பின் ஒரு சூழ்நிலையில் அனைவருமே மேரி போவின் பிரம்மாண்டமான மாளிகையில்...
வேளாளர்கள் மட்டுமல்ல.... வீரத்திலும் தீரத்திலும் அவர்களது மனைவிகளும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது இந்தக் கதையிலும் வெளிப்படுகின்றது. ஆவேசமான சண்டைக்காட்சிகளும் பிரம்மாண்டமான சாகசங்களும் மிகத் தத்ரூபமாக சித்திரமாக்கப் பட்டிருக்கும் விதத்தில் நம்மை மெய்மறக்கச் செய்யும் இந்த மாயாவி எனப்படும் முகமூடி வேதாளரின் முதல்முதலாக தமிழ் பேசும் அட்டகாசமான அதிரடி சாகச மொழிமாற்ற காமிக்ஸ் இன்று...
இதுவரையில் காணாத அரிய காமிக்ஸ்களை
இனிய முகத்துடன் ஸ்கேன் செய்து பிடிஎஃப் தரும்
திருப்பூர் செல்வன் நண்பர் குமார் அவர்களின்
பிறந்தநாளுக்கான வாழ்த்துக்களுடன் பிடிஎஃப் ஆக உங்களுக்கு
*குழந்தை குமாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு*
*பழிவாங்கும் கடல் ராணி*
*இன்றுவரை தமிழில் வெளிவராத மாயாவி முகமூடி வேதாளரின் புத்தம் புதிய மொழிமாற்று காமிக்ஸ் சாகசம்*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...