வியாழன், 5 டிசம்பர், 2019

IND_22_005_நீரடிக் கொள்ளை_TCT

இனிய வாசகர்களே...
இன்னொரு லட்டு திங்க ஆசையா..சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களின் அன்பளிப்பாக எனது பிறந்த தினமான இன்றைக்கு இரட்டை மகிழ்ச்சியைப் பரிசளித்துள்ளார்.

உங்களோடு இரண்டாவது லட்டினை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி..
ராணி காமிக்ஸில் அதிரடிப் பெண் என்ற பெயரில் வெளியான இந்த படைப்பினை அதற்கு முன்பாக வண்ணத்தில் மூத்த தலைமுறை வாசகர்கள் இரசித்துள்ளனர் என்பது எத்தனை ஆச்சரியமான தகவல். விஞ்ஞானத்திலும் கூட ஒரு தேடல் உண்டு..


மனிதர்கள்  நாம் இப்போது வளர்ச்சியடைந்துள்ளதைக் காட்டிலும் பன்மடங்கு அறிவாற்றல் பெற்று வாழ்ந்திருந்தனர்..
அவர்களது பல தொழில் நுட்பங்கள் இன்றைக்குமே பெரியதொரு புதிராக உள்ளன என்ற கருதுகோளை அவ்வப்போது டிஸ்கவரி, ஹிஸ்டரி போன்ற சேனல்களில் நீங்கள் கண்டு யோசித்திருக்கக்கூடும். எகிப்திய பிரமிடுகளையும், மாயன் காலண்டரையும், விசித்திரமான நடு கற்களையும் பார்த்திருக்கிறோம்..அவற்றை எப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கியிருப்பர் என பிரமித்து இருக்கிறோம்..
சித்திரக்கதையுலகில் இது போன்று..அத்தனை பெரிய ஆராய்ச்சி இல்லைதான் எனினும் இதோ சில பல ஆண்டுகள் முந்தைய தலைமுறை வண்ணத்தில் கண்டு களித்த சித்திரக் கதைகள் அடுத்த தலைமுறைக்கோ வெவ்வேறு பெயர்களில் கருப்பு வெள்ளையில் கிடைக்கப் பெற்றன என்ற விசித்திர முரண் நம் கண் முன்பே காட்சியாகிறது.. சில மொபைல் ஸ்கேன்லேட்டர்கள் இப்போது களத்தில்  பாடுபட்டு அபூர்வமான புத்தகங்களை நம் முன் பரிமாறி வருகிறார்கள்.. அவர்களது மொத்த முயற்சியும் பாராட்டத் தகுந்ததே. இதில் பிரபலமான சிறப்பான எடிட்டிங்கில் கலக்கி வரும் திரு.சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களுக்கு இருக்கும் கடுமையான பணிச்சூழலிலும் நமக்காக நேரம் ஒதுக்கி இந்த வித்தியாசமான கதையை பதிவிட உதவியுள்ளார் அவருக்கு நன்றிகள் அகெய்ன். அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள் சார்...
எண்ணெய் கப்பலை வழிமறித்து நூதன முறையில் எண்ணெய் கடத்தல் நடக்கிறது. மாயாவி எப்படி அந்த சதிவேலையை முறியடிக்கிறார் என்பதை பரபர பக்கங்களை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்..ஹேப்பி ரீடிங் காமிக்ஸ் ப்ரியர்களே..

IND_22_005_நீரடிக் கொள்ளை_TCT




4 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...