ஞாயிறு, 8 டிசம்பர், 2019

திருதிரு...இது ஒரு மல்டி லெவல் கதைங்க...


பதினைந்தாயிரம் ரூபாயைக் கட்டிய அந்தபதினைந்து பேரும் வெட்டில் தப்பமுடியாமல் சிக்கிய ஆட்டின் கழுத்தாய் சிக்கித் திணறிக் கொண்டிருந்தனர்.. தன்னம்பிக்கை வார்த்தைகளை ஏதேதோ புத்தகங்களை வாசித்து பூஸ்ட் ஏற்றிக் கொண்டிருந்த அந்த இளைஞன் உற்சாகக் குரலில் அள்ளி விட்டுக் கொண்டிருந்தான்.. நீங்கள் மனது வைத்து வேலை செய்ங்க. ஃபோக்கஸ்டா உழைங்க. நீங்க போட்ட பதினைஞ்சாயிரத்தை இரண்டே பேரை சேர்த்து விட்டு அவங்களையும் உழைக்க வைங்க கம்பெனியை நம்பி வேலை செய்ங்க.. இதோ எனக்கு கம்பெனி அன்பளிச்ச காரைப் பாருங்க..கலரைப் பாருங்க..கப்சாக்களை நம்பிய அந்த ஆடுகள் மே என்று குரலெடுக்கக்கூட அவகாசமில்லாமல் அவன் ஆட்கள் கேள்வி எழுப்புவது போல அவ்வப்போது எதையாவது கேட்டு அதற்கு அவன் அரை மணி நேரம் லெக்சர் கொடுக்க கூட்டம் படக்கென முடிந்தது.. காரில் ஏறி ஓட்டியவன் கொஞ்சதூரம் போனதும் கார் தானே நின்றுபோக பெட்ரோல் காலி என்றது மீட்டர்.. பாக்கெட்டைத் தடவிக் கொண்டவன்.. போனை எடுத்து பாஸூக்கு அடித்தான் பாஸ் இன்னைக்கு பதினைஞ்சு ஆடுக ஷார்ப்பா போகுதுங்க.. காசு கொஞ்சம் அக்கவுண்ட்ல போடுங்க.. காசில்லை. பெட்ரோல் போடணும்...

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இப்போதான் ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங் கும்பல்ல சிக்கி வெளிய வந்து எழுதுன கதைங்க தலீவா.. வண்டிக்கு பெட்ரோல் போட காசிருக்கா தெர்லை. இன்னா பேஸ்றான்...அய்யடா...

      நீக்கு
  2. superb..ஏமாந்த ஏறி மிதிச்சுருவாங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. அப்படியே நம்புறாமாதிரி பேசுறானுங்க. நம்பினால் மிளகாய் அரைக்க நம் தலை கிடைச்சிரும் அவனுகளுக்கு..

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...